மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கனங்கோடு கீழ புல்லுவிளை பகுதியில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜேஸ் (26) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஜேஸ் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ரவுடியான சிம்சோனி என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அப்போது ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கத்தியை காட்டி மிரட்டி சிம்சோனி அவரிடம் இருந்து 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ரிஜேஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிம்சோனியை கைது செய்தனர்.