Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்… 50 ஏக்கர் சோளப் பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் புகுந்து உள்ளன.

அதன் பிறகு அவை சோலை பயிர்களில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகை அனைத்தையும் முழுமையாகத் தின்று சென்றன. ஒரு வயலின் சோளப் பயிர்களை தின்று முடித்த உடன், அடுத்த வயலுக்கு கூட்டமாக செல்கின்றன. அவ்வாறு அனைத்து வயல்களிலும் சென்ற சோளப் பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கி வருவதால், பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. மேலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 50 ஏக்கர் சோளப் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |