ஜெர்மனி நகரில் ஒரு அரிய வகை விஷ சிலந்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் வலம் வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்வேறு வகையான பூச்சிகள் உள்ளன. அதில் சில பூச்சிகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. அது கடித்தால் உடனே உயிர் போகும் அபாயமும் உள்ளது. அதன்படி தற்போது அரிய வகை சிலந்தி ஒன்று ஜெர்மனி நகரில் வலம் வருகிறது. NOsferatu என்று அறிய வகை விஷ சிலந்தி தற்போதைய லிப்ஜீக் என்னும் ஜெர்மனி நகர மக்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
இந்த சிலந்தியை கண்டெடுத்தவர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு நிபுணர்கள் இது விஷ சிலந்தி என்பதை கண்டுள்ளனர். தற்போது இந்த சிலந்தி ஐரோப்பா பகுதிகளில் வேகமாக படை எடுத்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.