Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படுத்த படுக்கையாக இருந்த போதிலும்…. ஆர்வமுடன் வந்து வாக்களித்த மூதாட்டி…!!

படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலைசாமி புரத்தில் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்சா படுத்த படுக்கையாகி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் 31-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மூதாட்டி ஆம்புலன்சில் வந்துள்ளார். அதன் பின்னர் தேர்தல் அலுவலர்கள் ஸ்டெச்சர் மூலம் மூதாட்டியை வாக்களிக்க அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி தெரிவித்த சின்னத்தில் தேர்தல் அலுவலர்கள் வாக்களித்துள்ளனர்.

Categories

Tech |