Categories
மாநில செய்திகள்

படுத்த படுக்கையாக இருக்கும் மாணவி சிந்துவை…. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாள தெருவில் சக்தி(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியிலுள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி (36) ஆவார். இவர்களுக்கு சிந்து என்ற மகள் இருக்கிறார். சென்ற 2020 டிசம்பரில் தோழி வீட்டின் 3-வது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத வகையில் கீழேவிழுந்ததில் அவருடைய 2 கால் எலும்புகளும் முறிந்தது. மேலும் தாடையின் ஒருபகுதி முழுதும் சேதமைடைந்தது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் உயிர் தப்பிய சிந்து 2 வருடங்களாக படுத்த படுக்கையாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் ஆசிரியர்கள், நண்பர்கள் உதவியுடன், வீட்டில் இருந்தப்படி படித்து அண்மையில் பிளஸ் 2 தேர்வை எழுதினார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிந்துவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சிந்துவுக்கும் அளிக்கும் சிகிச்சை முறைகளையும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவி சிந்துவுக்கு உற்சாகம் அளிக்கும் அடிப்படையில் பேசிய முதலமைச்சர், அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார். முதலமைச்சரின் இந்த சந்திப்பின் போது ஒமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் போன்றோர் உடனிருந்தனர். இதற்கிடையே குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓராண்டு காலம் மருத்துவமனை வளாகத்தில் டீ வியாபாரம் செய்திட சிந்துவின் தந்தை சக்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |