தமிழில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை சமரசம் செய்துகொள்ள அழைத்ததாக நடிகை ஷாலு ஷம்மு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் “குறிப்பிட்ட பெரிய நடிகருடன்”சமரசம் செய்து கொள்ளாவிட்டால் அவரின் படங்களில் நடிப்பதற்கு பெண்களின் திறமை நிராகரிக்கப்பட்டதாக நடிகை ஷாலு ஷம்மு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் எங்களுக்கு மாற்றம் வேண்டும், நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நடிகர் யார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு தர ஏற்கனவே பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை அழைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.