Categories
தேசிய செய்திகள்

படி பூஜைக்கு 2037 வரை முன்பதிவு முடிந்தது…. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படும் படிபூஜைக்கு 2037 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். இதற்கு அடுத்ததாக உதயா ஸ்தபன பூஜைக்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பூஜைக்கு 2024 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் நடப்பு சீசனை முன்னிட்டு ஒரு டின் அரவணை 250 மில்லி 80 ரூபாய், அப்பம் ஒரு பாக்கெட் 35 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |