வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியை சேர்ந்தவர் சுரேஷ் (33 வயது). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைக்காக பல்வேறு நிறுவனங்களில் விண்ணப்பித்தும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சுரேஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு வேலையில்லாத காரணத்தால் சரியான பெண்ணும் அமையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் என்பவர் வீட்டில் தனியாக இருக்கும்போது ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.