கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூடுதல் பேருந்து வசதிகளை மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இயக்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.