பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் முன் மற்றும் பின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்வதற்கான வழியில் 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைந்துள்ளதால் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும், மாணவர்கள் படிகளில் தொங்கிய படி பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர்அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.