Categories
மாநில செய்திகள்

படிக்கட்டில் தொங்காதீங்க!…. ஆத்திரத்தில் ஓட்டுநரை தாக்கிய மாணவன்…. பெரும் பரபரப்பு….!!!!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றுமாலை 5:30 மணி அளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு போகும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும்போது அந்த அரசு பஸ்ஸின் முன்பு படியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும்படி கூறியுள்ளார். இதன் காரணமாக ஓட்டுநருடன் பள்ளிமாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி ஓட்டுநர் அந்த மாணவர்களிடம் படியில் பயணித்ததால் கீழே இறங்க கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்ததோடு, கற்களை கொண்டு தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் பொதுமக்கள் ஒன்றுசேரவே அங்கிருந்து மாணவர்கள் 4 பேரும் தப்பி இருக்கின்றனர். அவர்களில் ஒரு மாணவனை ரஜினி என்பவர் பிடித்தார். இதன் காரணமாக அம்மாணவன் ரஜினியை தாக்கியதில் அவருக்கு தலையில் பலந்த காயமுற்று இரத்தம் வந்தது. இதனால் கோபமடைந்த பொதுமக்களே அந்த மாணவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |