Categories
மாநில செய்திகள்

படம் பார்த்த ராமதாஸூக்கு தலைவலி….. அப்படி என்ன படம் பா பாத்தாரு….!!!!

படம் பார்த்து தனக்கு தலைவலி வந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளே இல்லை… மது அருந்தும் காட்சிகளே இல்லை… கல்வியை கடைச்சரக்காக்கும் காட்சிகளும் இல்லை.. பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளும் இல்லை. கொலை, தற்கொலை காட்சிகளும் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால், பார்த்த எனக்கு தலைவலி தான் மிச்சம்!” என்று கூறியுள்ளார். இவர் தான் எந்த படத்தை பார்த்தேன் என்பதை குறித்து இதில் கூறவில்லை. முடிந்தால் நீங்கள் கண்டுபிடியுங்கள்.

Categories

Tech |