இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். அவ்வகையில் தற்போது தனது குஞ்சுகளுக்காக ராஜ நாகத்தை எதிர்த்துப் போராடும் கோழியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தனது குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் தன் உயிரையும் கொடுத்து விடுவார்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ தான். இந்த வீடியோவில் கோழிக்குஞ்சுகள் அருகே ஒரு ராஜ நாகம் வந்துள்ளது. அதனைப் பார்த்த கோழி வேகமாக வந்து ராஜ நாகத்தை எதிர்த்து சண்டையிட்டது. சிறிது நேரம் கழித்து ராஜநாகம் அந்த இடத்தை விட்டு சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/ViralPosts5/status/1593122311183675396