நடிகர் பிரித்விராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் . இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, நீயும் நானும், பாரிஜாதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஜன கன மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
அப்போது நடிகர் பிரித்விராஜ் , இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டு அதில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். நடிகர் பிரித்திவிராஜ் அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியதாகவும் தற்போது நான் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என நம்புவதாக கூறியுள்ளார்.