தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் பிரபல நடிகர் நாசர் காயமடைந்தார். தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஸ்பார்க் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்த விபத்து நடந்தது. சாயாஜி ஷிண்டே மற்றும் நடிகைகள் சுஹாசினி மற்றும் மெஹ்ரீன் பிர்சாதா ஆகியோருடன் ஒரு காட்சியை படமாக்கும்போது விபத்து ஏற்பட்டது. நாசர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் ஓய்வில் இருப்பதாகவும் அவரது மனைவி கமலா கூறியுள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.