Categories
சினிமா

படப்பிடிப்புக்கு ரெடியான நடிகர் அஜித்…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தின் முதல் மற்றும் 2ஆம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புது தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் அஜித் விமானநிலையத்தில் உள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து பாங்காக் போகும் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் பாங்காகில் நடைபெறும் “துணிவு” படப் பிடிப்பில் பங்கேற்பதற்கு சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவருடன் நடிகை மஞ்சுவாரியர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |