நடிகை திரிஷா குதிரைப் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை திரிஷா விஜய் ,அஜித் ,ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் நடித்தவர். இவரது நடிப்பில் பரமபதம் விளையாட்டு , கர்ஜனை , ராங்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகி உள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் திரிஷா நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படம் சரித்திரப்படம் என்பதால் இப்படத்திற்காக திரிஷா குதிரை பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார். திரிஷா குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகி ன்றனர். இப்படத்தில் விக்ரம் ,கார்த்தி , ஐஸ்வர்யாராய் ,ஜெயம் ரவி , ரியாஸ்கான் , சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.