கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கின்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசியபோது, வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் குஞ்சென்றும் முப்பென்றும் உண்டோ. அது போல இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்கும் என நம்புகின்றேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்த ஐசரி கணேஷ் என்னை தந்தை போல என்பார் அவருக்கு நான் தனியாக எதுவும் செய்யவில்லை.
மேலும் தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான் தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும் புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. மேலும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே மக்கள் ஆதரவு தருவார்கள் சிம்பு கடின உழைப்பாளி படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். மேலும் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது இந்த நிலையில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் பண்ணுவதில்லை நாளையே பேசி முடித்துவிடலாம் இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என கமல் பேசியுள்ளார்.