மங்களூர் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர்.
அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒரிசாவை சேர்ந்தவர்கள். விபத்தில் படகு மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது” என்று தெரியவந்தது. கடலோர காவல்படை அலுவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மற்ற மீனவர்களை தேடி வருகின்றனர்.