Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்வர் மீது பா.ஜ.க. புகார்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

சண்டிகர் சீக்கிய குருத்வாராவுக்குள் மதுகுடித்துவிட்டு புகுந்ததாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக பா.ஜ.க சார்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கடந்த 14ஆம் தேதி சீக்கிய புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பதிண்டா மாவட்டத்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சென்ற முதலமைச்சர் பகவந்த்மான் சிறப்பு வழிபாடு நடத்தினார். அந்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு வந்ததாக, குருத்வாராக்களை நிர்வகிக்கும் “சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி” நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது. இச்செயலுக்கு பகவந்த் மான் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது. இந்த நிலையில் மது அருந்திவிட்டு குருத்வாராவுக்குள் புகுந்த பகவந்த்மானுக்கு எதிராக பா.ஜ.,வை சேர்ந்த தஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Categories

Tech |