Categories
அரசியல் தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக…. மீண்டும் இவர் தான்…. வெளியான தகவல்…!!!

காங்கிரஸ் கட்சிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் இந்த ராஜினாமா கடிதத்தை மேலிடமானது  ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரேஷ் ராவத் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அவர் தனது 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கு அடுத்த நாள் ராகுல்காந்தியை, ஹரிஷ் ராவத் உடன் சித்து சந்தித்து கலந்துரையாடினார். இதன்பின்னர்  ஹரிஷ் ராவத் மற்றும் சித்து ஆகியோர் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சித்து, “எனது குறைகள் குறித்து ராகுல் காந்தியிடம் முறையிட்டேன். இவை அனைத்திற்கும் தற்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது”என்று கூறினார் . இதன் பின் பேசிய ஹரிஷ் ராவத், “சித்து தான் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆகவே இனிமேல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார்” என்று உறுதியளித்தார்.

Categories

Tech |