பஞ்சாப்மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கானது ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அந்த கட்சியின் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பக்கத்தை ஏறத்தாழ 1.75 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
முன்பே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு, உத்தரபிரதேச முதல் மந்திரி அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கு போன்றவை முடக்கப்பட்ட சூழ்நிலையில், சென்ற 3 தினங்களில் முடக்கப்பட்ட 4-வது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்ட பிறகு, அதில் பல்வேறு அர்த்தமற்ற பதிவுகள் பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வருகிறது. இணையவழி திருடர்கள் அந்த ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களால் அந்த ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தம் இல்லாத மற்றும் அர்த்தமற்ற விளம்பரப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.