Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் அரியானாவில் 2வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் …!!

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வடமாநிலங்களில் கொதித்து எழுந்துள்ள விவசாயிகள் இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் சட்டம் ஆனால் தங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.  ஆகவே 3 மசோதாகளையும் மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Categories

Tech |