பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது. இன்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னையில் மொயின் அலி 46, டூ பிளஸ்சிஸ் 36 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.