நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளதால் மற்ற பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டர் விலை வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், மக்களை அரசு பச்சை காய்கறிகளை சாப்பிட சொல்கிறதா என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ககோலி கோஷ் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் பேசிய அவர், “சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களில் 4 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ≈1,100க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏழையால் இவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியுமா, பச்சை காய்கறிகளைதான் சாப்பிட வேண்டும்” என்றார்.