பெற்றோரின் அன்பு கிடைக்காததால் 5 வயது சிறுமி தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரும் உள்ளனர். இந்நிலையில் 5 வயது சிறுமி தனது பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை பட்டு தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் மற்றும் அவருடைய தாய் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் நேரம் பார்த்து இந்த சிறுமி அடிக்கடி இவ்வாறாக செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது உடலில் இருந்த சிறு சிறு காயங்கள் கவனித்த மருத்துவர்கள் வளர்ச்சி காரணமாக இந்த காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என கருதியுள்ளார்.
மேலும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் மேலும் மேலும் காயங்கள் அதிகரித்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து மருத்துவர் வீட்டில் சிசிடிவி கேமரா வைக்குமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் 5 வயது சிறுமி தன்னுடைய தங்கைக்கு தொடர்ந்து சூடு வைத்து வருவது பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட சிறுமி தன்னை கவனிக்காததால் தங்கையை மட்டுமே அன்பாக பார்த்து வருவதாலும் தான் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.