பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த டுவீட்டை டேக் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசத்தின் நலனுக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் குருபூஜை அன்று அவரது நினைவைப் போற்றிய நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்..
தேசத்தின் நலனுக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் குருபூஜை அன்று அவரது நினைவைப் போற்றிய நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். https://t.co/JDTTzVdf1F
— K.Annamalai (@annamalai_k) October 30, 2022