மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 221-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டிலுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பசும்பொன் தேவர் தங்கக்கவசம் எந்த தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மேலும் பசும்பொன் தேவர் தங்கக்கவசம் அதிமுகவால் வழங்கப்பட்டது ஆகும். அதனை பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்துச் செல்லலாம். தற்போது தேவர் தங்கக்கவசத்தை யார் பெறுவது என்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி நடுநிலையோடு செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.