Categories
அரசியல் மாநில செய்திகள்

பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம்…. கருணாஸ் பரபரப்பு அறிக்கை…!!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் அப்புறப்படுத்தி விட்டதாக முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்த ஒரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேவர் பெயரில் மதுரை ஏர்போர்ட் மாதிரி விழா மேடை வைத்திருந்தோம். இதை, கமுதி DSP மணிகண்டன் எந்தவித அறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்தியுள்ளார். இதை கண்டித்து பசும்பொன்னில் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |