பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பட்டாசுகளை வெடிப்பதனால் நம்மை சுற்றி இருக்கும் நீர், நிலம், காற்று போன்றவை பெருமளவில் மாசுபடுகின்றது. மேலும் பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒளி காற்று மாசினால் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 அக்டோபர் 23-ல் வெளியிட்டுள்ள அணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் பட்டாசுகளை வெடிப்பதனால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது பற்றி போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த நான்கு வருடங்களாக தீபாவளி பண்டிகை என்று காலை 6 மணி முதல் 7ஏழு மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்னயம் செய்து அனுமதி வழங்கி உள்ளது. இந்த வருடமும் அதை கடைபிடிக்க வேண்டும் அதாவது பொதுமக்கள் குறைந்த ஒளியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுடன் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சி செய்ய வேண்டும். இதனை அடுத்து அதிக ஒளி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கப்பட வேண்டும். குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.