பசுமை தமிழகம் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 3/4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தேர்தல் ஆணையம் மின்னணு கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழகம் திட்ட தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாவட்ட வன உயிரின காப்பாளர் முன்னிலை வகித்தார். இதுப்பற்றி ஆட்சியர் கூறியுள்ளதாவது, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பசுமை போர்வெளியில் 23.27 சதவீதத்தில் இருந்து 33% மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த பத்து வருடங்களில் விவசாய நிலம், தரிசு நிலம், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழில் நிறுவனங்களின் பகுதிகள், அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நட இருக்கின்றது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 86 ஆயிரத்து 5 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு மரக்கன்று நடும் பணிகள் நடந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.