Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பசுமாட்டை கொன்ற புலி…. கூண்டு வைத்த வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை அடித்து கொன்று செல்கிறது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை படி வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஒரு பசு மாட்டை புலி மீண்டும் அடித்து கொன்றதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் புலி நடமாட்டம் இருக்கும் பகுதியில் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |