Categories
தேசிய செய்திகள்

பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள்… கிண்டலாக பதிவிட்ட கபில் சிபல்…!!!

உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது இடம் கிடைத்திருந்தது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 117 நாடுகளின் பட்டியலில் 101 ஆவது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான், பங்காளதேஷ், நேபால் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை குறிக்கின்றது.

இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி வறுமை உள்ளிட்டவற்றை ஒழித்த பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கிண்டலுடன் பதிவிட்டுள்ளார். மேலும் பசி
தீவிரமான நாடுகளில் 2020 ஆம் ஆண்டு இந்தியா 94வது இடத்தில், தற்போது 101 வது இடத்துக்கு தள்ளப்பட்டதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |