Categories
தேசிய செய்திகள்

பசிக்குது சோறு போடுங்க…. தாய், சகோதரி கொலை…. கோடாரியால் கொலைவெறி தாக்குதல்…!!

பசியில் இருந்தவருக்கு சாப்பாடு கொடுக்காததால் தாய் மற்றும் சகோதரியைப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருக்கும்  ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தேவ்ஷி பாட்டியா என்பவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசித்து வருகின்றார். கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவ்ஷி வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் மற்றும் சகோதரி சமைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அன்று மதியம் முதலே தாய் கஸ்தூரும் சகோதரி  சங்கீதாவும் சமைப்பது பற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

இதனிடையே தேவ்ஷி தான் இரவு வருவதற்குள் உணவு சமைத்து வைக்கும்படி கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு அவர் வீட்டிற்கு வரும் போதும் இரண்டு பெண்களும் தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் மிகுந்த பசியில் இருந்த தேவ்ஷி யாராவது சமையல் செய்து சாப்பாடு கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

ஆனால் அதனை காதில் வாங்காமல் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் மிகுந்த கோபம் கொண்ட தேவ்ஷி வீட்டிலிருந்த கோடாரியால் இருவரையும் வெட்டிக் கொலை செய்தார். இதில் தாய் மற்றும் சகோதரி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க பின்னர் தேவ்ஷி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு தேவ்ஷியை  கைது செய்தனர்.

 

Categories

Tech |