Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா” கலந்து கொண்ட பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாடார் பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 11-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |