உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாமல் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பழைய குயவர்பாளையம் பச்சரிசி கார தோப்பு பகுதியில் நாகராஜன்(46) என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி லாவண்யா(34). இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(15)என்ற மகளும், அர்ஜுன் (13)என்ற மகனும் உள்ளார்கள். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடுவதற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.
மேலும்சில நபரிடம் லட்சக்கணக்கில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்திக்க நேரிட்டது. இதனால் முதலீடு செய்திருந்த நாகராஜனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த நாகராஜனும் அவர் மனைவி லாவண்யாவும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இத் தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவத்திற்கு பங்குச்சந்தை முதலீடு தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டுட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.