லூஃப்தான்சா நிறுவனம் மீண்டும் தனியார் கைக்கு சென்றுள்ளது.
ஜெர்மனியில் லூஃப்தான்சா என்ற விமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தை ஜெர்மனி அரசு கொரோனா தொற்றின்போது திவால் நிலையத்திலிருந்து காப்பாற்றுவதற்காக 9 மில்லியன் யூரோ கொடுத்து 20 சதவீதம் பங்குகளை வாங்கியது. இந்த பங்குகளை தற்போது விற்றுவிட்டது. இதனால் லூஃப்தான்சா மீண்டும் தனியார் கைக்கு சென்றது. இந்நிலையில் தேசிய மீட்பு பொதியின் ஒரு பகுதியாக லூஃப்தான்சா விமான நிலையத்தில் இருந்து எடுத்த பங்குகளை ஜெர்மனி அரசு இப்போது விற்று விட்டதாகவும், அதன் செயல்பாட்டில் மூலம் ஆரோக்கியமான லாபத்தை பதிவு செய்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் எல்லைகள் மூடப்பட்டது.
இதனால் அனைத்து நாடுகளிலும் விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் அரசாங்கம் அக்டோபர் 2023-க்குள் பங்குகளை விற்க ஒப்புக்கொண்டது. ஆனால் பயணம் மீண்டும் தொடங்கும் போது விமான நிறுவனத்தின் நிதி நிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஜெர்மனி கடந்த ஆண்டு நவம்பரில் அதன் பங்குகளை விற்கத் தொடங்கியது, மீதமுள்ள 6.2 சதவீத பங்கு மூலதனத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விற்று விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அரசு பங்குகள் 36 மில்லியன் யூரோக்களை செலுத்தி 1.07 மில்லியன் யூரோக்களுக்கு விற்று விட்டது. இதனால் நிறுவனத்திற்கு 760 மில்லியன் லாபம் கிடைத்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் தான் லூஃப்தான்சா தனது முதல் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது .