அமெரிக்க அதிபர் ஜோபைடன் வார இறுதி நாளான சனிக்கிழமை மத்திய அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டி உள்ள டேலேவேர் பகுதியிலுள்ள ஒரு சொகுசு பங்களாவில் தன் மனைவியுடன் தங்கி இருந்தார். இதில் அதிபர் ஜோபைடன் தங்கி இருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த பாதுகாப்புகளையும் மீறி ஜோபைடன் தங்கியிருந்த பங்காளா மீது விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனே ரேஹோபோத் கடற்கரையிலுள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு ஜோபைடன் மற்றும் அவரது மனைவி அழைத்து செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை “இவ்விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. மேலும் அதிபரின் பாதுகாப்புக்கோ அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை” என தெரிவித்துள்ளது. அத்துடன் விமானத்தை ஓட்டிய விமானியிடம் அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு சேவை விசாரணையை தொடங்கியிருக்கிறது.