கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் ரூபாய் இரண்டரை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி அருகே இருக்கும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆடுகள் கொண்டுவரப்பட்டது. நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பண்டிகையை முன்னிட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டவரப்பட்டு அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது.
இங்கு ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் 20,000 மேற்பட்ட வியாபாரிகள் வந்தார்கள். வழக்கம்மாக 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூபாய் 12 ஆயிரத்துக்கு விற்பனையாகின்ற நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 10 கிலோ எடை கொண்ட ஆடு 15000 முதல் 17000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆடு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 67 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் 2 1/2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.