Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்…!!!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது.

சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

Related image

வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட ஆடுகளை மொத்த விற்பனையாளர்கள் வாங்கிச் சென்றனர். இதனால் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |