Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் மேல் நடந்து சென்ற பூசாரி…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி பக்தர்கள் மீது  நடந்து சென்று  அவர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் அருகில் ஆவத்துவாடியில் புகழ் வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதுபோக செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் சன்னிதானங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாசி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அம்மனுக்கு கூழ்  ஊற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிலையில் பக்தர்கள் தங்களது  வேண்டுதல்கள்  நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தரையில் படுத்து கொண்டனர். அவர்களின் மேல்  கோவில் பூசாரி தலையில் கரகத்தை ஏற்றிக் கொண்டு  நடந்து சென்றுள்ளார். அதன்பிறகு கோவில் பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |