Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் செய்த காரியம்…. சிக்கிய கொண்ட ஊழியர்…. திருப்பதியில் பரபரப்பு…..!!!!!

ஆந்திரமாநிலம் குண்டூர் மற்றும் பீகாரைச் சேர்ந்த 8 பக்தர்கள் ரூபாய் 300 டிக்கெட்டில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த ரூபாய்.300 டிக்கெட்டுகளை ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர் மற்றும் திருப்பதியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் வாங்கி கொண்டார். அந்த டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்கேன் செய்வது போன்று நடித்து 8 பக்தர்களை சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் அனுப்பிவைக்க முயற்சி செய்தார்.

அந்த பக்தர்கள் கொண்டுவந்த ரூபாய் 300 டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, அவை அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த பக்தர்களை வெளியே அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில் ஸ்கேன்மைய ஊழியரான வெங்கடேசனுக்கு உதவியாக ராஜு எனும் ஊழியரும் செயல்பட்டிருக்கிறார். அதன்பின் 2 ஊழியர்களை தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து திருமலை 2-டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |