Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! மகாதீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்…. தொடர்பு எண்கள் அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள்.

இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்துள்ளார். டிச..5 முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் 9445456040, 9445456043 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

Categories

Tech |