தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டையொட்டி அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.