Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. இனி இதெல்லாம் எடுத்து செல்ல தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஷாம்பு, குடிநீர் பாட்டில்கள் போன்ற அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. மேலும் அடிவாரத்திலுள்ள அலிபிரி சோதனைச்சாவடியில் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள் சோதனை செய்த பின்னரே மேலே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |