Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! ஐயப்பனை உடனே தரிசிக்க…. சூப்பர் திட்டம் வந்தாச்சு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கபட்டு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் (ஸ்பாட் புக்கிங்) புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை நேற்று கேரள அரசு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதன்படி நிலக்கல், எருமேலி, குமுளி, திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோவில், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பந்தளம் வலிய கோயிக்கல் கோவில், பெரும்பாவூர் தர்மசாஸ்தா கோவில், கீழில்லும் மகாதேவர் கோவில் ஆகிய 10 இடங்களில் இன்று முதல் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனடி முன்பதிவுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தவிர பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தலாம்.

Categories

Tech |