Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…. இதை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திருப்பதி தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு….!!!!

திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வருடமும் பல்வேறு விழாக்கள் மற்றும் உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவம் மூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த பிரம்மோற்சவ விழா எளிமையாக நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவம் விழா நேற்று தொடங்கிய அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதாவது ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் விழா நாள்தோறும் காலை மற்றும் இரவு நான்கு மாத வீதிகளில் வாகன சேவை நடைபெறுகிறது.

அப்போது நான்கு மாத வீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீச வேண்டாம்.சில்லரை நாணயங்களை வீசுவதால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும் வாகனத்தை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் தங்கம் மட்டும் வைர  ஆபரணங்களும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக பிரம்மோற்சவம் விழாவிற்கு வருகின்ற அனைத்து பக்தர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். எனவே பக்தர்கள் முறையாக முகக் கவசம் அணிந்தும் நாணயங்கள் வீசுவதை தவிர்க்கவும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |