Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்தலங்கள், கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீராட நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தேங்காய் பழம் போன்ற பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. கட்டாயம் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் தான் சாமி தரிசனத்துக்கு அனுமதி செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |