Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு குட் நியூஸ்…. சதுரகிரி செல்ல 4 நாட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களுக்கு, 10 வயதுக்குட்பட்ட, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிலுக்கு வர அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அதே போன்று இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும்  நீர் ஓடையில் குளிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனிடையில் பிரதோஷத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். நுழைவுவாயிலில் பக்தர்களுக்கு சேவை கட்டணமாக வனத்துறை சார்பாக ரூ 5 வசூல் செய்யப்படும் நிலையில் தற்போது சேவை கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என வனத்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |