Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்கோடாவில் பல்லி..! அதிர வைத்த மிட்டாய் கடை…. நெல்லையில் பரபரப்பு …!!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் வாங்கிய பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல இனிப்பு கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீரென ஸ்ரீராம் லாலா கடையில் சோதனையை மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட ரசகுல்லாவை அதிகாரிகள் கீழே ஊற்றி அழித்தனர்.

ஜாங்கிரி மற்றும் ஓமப்பொடி ஆகிய பலகாரங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். மேலும் 24 மணி நேரத்திற்கு பிறகு மறு ஆய்வு நடத்திய பிறகே கடையில் மீண்டும் விற்பனையை தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தன்னிடம் 20 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக கடை உரிமையாளர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Categories

Tech |